Não gostou? Não há problema! Pode devolver os artigos até 30 dias
Não há como errar com um vale de oferta. O presenteado pode escolher qualquer produto da nossa oferta.
Até 30 dias para devoluções
வீரன் என்ற நாய் ஓட்டமும் நடையுமாகச் சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், திடீரென்று அது நின்றது. காரணம், அங்கு ஓர் அழகிய வாத்து தலையைக் குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தது தான் !
வீரன் அதன் அருகே சென்றது. மிகுந்த இரக்கத்துடன், "ஏன் தங்கச்சி அழுகிறாய் ! என்ன காரணம் ?" என்று கேட்டது.
"ஒன்றுமில்லை, அண்ணா ! என் உயிர் நாளையோடு போகப் போகிறதே என்ற கவலைதான் " என்றது வாத்து.
"என்ன, நாளையோடு உன் உயிர் போகப்போகிறதா ?"
"ஆம், அண்ணா ! என்னை இவ்வளவு நாளும் வளர்த்து வந்த எஜமானன் நாளை என் உயிரை வாங்க போகிறாராம். நாளைக்கு அவருடைய மாப்பிள்ளை ஊரிலிருந்து வருகிறார். அவருக்கு ஒரு விருந்து வைக்கப் போகிறார்களாம். அது தான்......" இதற்கு மேல் அதனால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது. கண்களிலிருந்து 'மள மள' என்று கண்ணிர் வந்தது.
"அட பாவமே உன் எஜமானனுக்குக் கொண்டாட்டம் உனக்குத் திண்டாட்டமா? சரி, அழாதே. நீ ஏன் இதற்குக் கவலைப்பட வேண்டும் நாளைக்குத்தானே விருந்து இப்பொழுதே எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போய்விட்டால் போகிறது !" என்றது வீரன்.
"ஓடிப்போய்விடலாம். ஆனாலும், எங்கே போனாலும் மனிதர்கள் என்னைச் சும்மா விடவா போகிறார்கள் அத்துடன், இவ்வளவு நாளும் எனக்கு ஏராளமாகத் தீனி போட்டு அருமையாக வளர்த்தாரே, அந்த எஜமானனை மோசம் செய்துவிட்டு ஓடிப்போவது நல்லதா ? அதுதான் யோசிக்கிறேன். நீயே சொல்" என்றது வாத்து.
Olá! Sou o Libroamiko, o seu conselheiro de livros.
Como posso ajudar?